கான்கிரீட் துறையில் மணல், கல், நொறுக்கிய கல், சிமெண்டு, நீர் போன்ற பொருட்களை எடையிட பயன்படும் என்பதால், விற்பாலங்கள்  மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

எஸ்ஸே டிஜிட்ரானிக்ஸ் கான்கிரீட் துறைக்கான சிறப்பு தீர்வுகளை உருவாக்கியுள்ளது. இத்தீர்வுகள் உலக கான்கிரீட் இந்தியா 2024 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மும்பை கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது.

கான்கிரீட் விற்பாலங்களின் வகைகள்

  • குழி வகை விற்பாலம்: பெயர் சொல்வதுபோல, இந்த விற்பாலம் ஒரு குழி தோண்டி அமைக்கப்படுகின்றது, எனவே சிவில் பணிகள் அவசியமாகும். இருப்பினும், இது குறைந்த இடத்தைப்ப் பயன்படுத்தும். மேடை சாலையின் மட்டத்துடன் சமமாக இருப்பதால், வாகனங்கள் எளிதாக மேடைக்கு ஏற முடியும். மேலும் விற்பாலத்தின் உபகரணங்களை பராமரிக்கவும் எளிதாக இருக்கும்.

Concrete Pit Weighbridges Features - Essae Digitronics

  • குழியில்லா விற்பாலங்கள்: இந்த வகை விற்பாலங்கள் தரை மேற்பரப்பில் நேரடியாக அமைக்கப்படுகின்றன, எனவே குழி தோண்டும் பணிகள் தேவையில்லை. இதை அமைப்பது எளிது, ஆனால் குழி வகை விற்பாலங்களைப் போல இல்லாமல், இதற்கு ரேம்ப் அமைக்க கூடுதல் இடம் தேவைப்படும்.
Concrete Pitless Weighbridges Features - Essae Digitronics

எசா கான்கிரீட் விற்பாலங்கள் 7.5 மீ x 3 மீ, 9 மீ x 3 மீ, 12 மீ x 3 மீ, 15 மீ x 3 மீ மற்றும் 18 மீ x 3 மீ என்ற பல்வேறு மேடை அளவுகளில் கிடைக்கின்றன. இந்த விற்பாலங்கள் 40 டன் முதல் 150 டன் வரை எடை கொண்ட லாரிகளைக் கவனமாகவும் துல்லியமாகவும் அளவிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

கான்கிரீட் துறையில் விற்பாலத்தின் பயன்பாடுகள்

  1. அக்கிரிகேட்கள், சிமெண்டு, மணல் போன்ற மூலப்பொருட்களின் எடையை அளவிடுதல்.

  2. ரெடி-மிக்ஸ் கான்கிரீட், பிரீகாஸ்ட் கான்கிரீட் போன்ற வெளியேறும் தயாரிப்புகளின் எடையை அளவிடுதல்.

  3. கையிருப்பில் சேமிக்கப்பட்டுள்ள அக்கிரிகேட் குவியல்களின் எடையை அளவிடுதல்.

  4. பேட்சிங் மற்றும் கான்கிரீட் கலவையில் துல்லியத்தை உறுதி செய்தல்.

 

ஏன் எசா விற்பாலங்கள்?

கட்டுமானத் துறையில், சுமை அளவீட்டின் துல்லியம் பாதுகாப்புக்கும் செயல்திறனுக்கும் மிக முக்கியமானது. எசா டிஜிட்ரானிக்ஸ் விற்பாலங்களை வடிவமைக்கும் போது மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும், நீடித்த தரமான பொருட்களையும் பயன்படுத்துகிறது. துல்லியமான எடை அளவீடு திட்டங்களை நேரத்தில் முடிக்கவும், வளங்களை சிறப்பாக பயன்படுத்தவும் உதவுகிறது.

உயர்தர எஃகு, ஷாட்-பிளாஸ்டிங், எபாக்சி பூச்சு போன்றவற்றின் பயன்பாடு, எந்த சூழலிலும் நீண்டகால துருப்பிடிப்பு பாதுகாப்பை வழங்குகிறது. ஒவ்வொரு விற்பாலமும் அனுப்புவதற்கு முன் முன்கூட்டியே ஒழுங்குபடுத்தப்படுவதால் மிக உயர்ந்த தரத்திற்கேற்ற துல்லியமான அளவீட்டைக் கொண்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் 16,000-க்கும் மேற்பட்ட நிறுவல்களுடன், அதிக எடைப் பிரிவுகளுக்கான விற்பாலங்களில் எசா முன்னோடியாக உள்ளது.
மேலும் முக்கியமாக, எசா வழங்கும் உயர்தரக் காட்டிகள் தனித்தனியாக செயல்படவும் அல்லது கணினியுடன் இணைக்கப்பட்டும் இயங்கும் திறன் கொண்டவை. இதில் 20,000 பதிவுகள் வரை சேமிக்க முடியும். RS232, RS485 ஈதர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன. வேகமான தரவு உள்ளீட்டிற்கு தரநிலையான அல்பான்யூமெரிக் விசைப்பலகை உள்ளது. டபுள்-எண்டெட் ஷியர் பீம் லோட் செல் தொழில்நுட்பம் உராய்வை குறைத்து, கிடைமட்ட திசையில் சுதந்திரமான இயக்கத்தைக் கொடுக்கிறது. எசா டிஜிட்ரானிக்ஸ் அக்டோபர் 16, 17, 18 தேதிகளில் மும்பை எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெறும் வேர்ல்ட் ஆஃப் கான்கிரீ்ட் இந்தியா 2024 நிகழ்ச்சியில் பங்கேற்கிறது. மண்டபம் எண் 4, ஸ்டால் எண் D48-ல் எங்களைச் சந்திக்கவும்.

WOC இந்தியாவில் எங்களைச் சேருங்கள்! WOC இந்தியாவிற்கு உடனே பதிவு செய்து, கட்டுமானத்தின் எதிர்காலத்தை அனுபவிக்கவும்.